வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

கழுத்தில் ஏற்படும் கருமையை நீக்கும் எளிய இயற்கை அழகு குறிப்புகள்...!!

பல பேருக்கு கழுத்துப் பகுதி மட்டும் கருப்பு நிறம் அதிகம் நிறைந்ததாக இருக்கும். உடல் முழுவதும் மாநிறத்திலிருந்து, கழுத்து, சற்று கருப்பு நிற தோற்றத்தில் இருந்தாலும் அவ்வளவாக வெளியில் தெரியாது. ஆனால் சிலபேருக்கு கழுத்தில், கருமை நிற வர்ணம் பூசியது போல் பளிச்சென்று வெளியில் தெரியும்.
தேன், எலுமிச்சை, சர்க்கரை இந்த மூன்று பொருட்களுக்கும் சருமத்தை அழகாக்கும் தன்மை அதிகமாகவே உள்ளது. ஆகவே தேன் ஒரு சிறிய மூடி அளவு,  எலுமிச்சைசாறு ஒரு சிறிய மூடி அளவு, சர்க்கரை 1/2 ஸ்பூன், என்ற அளவில் ஒன்றாகக் கலந்து கழுத்துப்பகுதியில் போட்டு தினம்தோறும் பத்து நிமிடங்கள் வரை  லேசாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள். 
 
வாரத்தில் மூன்று நாட்கள் இப்படி செய்யலாம். ஒரு வாரத்திலேயே நல்ல பலன் உள்ளதை உங்களால் கண்கூடாக காணமுடியும். இந்த முறையை கை முட்டி, கால்  முட்டி போன்ற இடங்களில் ஏற்படும் கருமை நிறம் மாறுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 
கற்றாழை உள்ளே இருக்கும் ஜெல்லை தனியாக எடுத்து, இரவுநேரங்களில் கழுத்தில் போட்டு பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து விட்டு, மறுநாள் காலை அதை  கழுவிக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து செய்து வர 10 நாட்களில் கருமை நிறம் முழுமையாக உங்கள் கருத்தை விட்டுப் போய்விடும். இதே முறையை கை  முட்டி, கால் முட்டி கருமை நிறம் மாறுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 
சூரியனின் ஒளி நேரடியாக படும் பாகம் ஒரு நிறமாக இருக்கும். சூரிய ஒளி படாமல் இருக்கும் பகுதி ஒரு நிறமாக இருக்கும். சூரியனின் ஒளி பட்டு நம்முடைய  சருமம் கருமை நிறம் அடைந்தால், அந்த இடங்களில் எல்லாம் ஆலிவ் எண்ணையை போட்டு நன்றாக மசாஜ் செய்து அரைமணி நேரம் ஊற வைத்து, அதன் பின்  குளிக்க வேண்டும்.