செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சருமத்திற்கு எண்ணற்ற நன்மைகளை தரும் கொத்தமல்லி பேஸ்பேக் !!

மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால், 1 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, கரும்புள்ளிகள் அகலும்.


உங்களுக்கு மென்மையான பட்டுப் போன்ற சருமம் வேண்டுமெனில், 2 டீஸ்பூன் பால், 2 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் சிறிது கொத்தமல்லி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரிவதை காணலாம்.
 
சிலருக்கு முகத்தில் சிவப்பு நிற தடிப்புக்கள் ஏற்படும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, 2 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு, 2 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தை காணலாம்.
 
தினமும் இரவில் படுக்கும் முன், கொத்தமல்லி இலை சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பான பலனைக் காண அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் கலந்து பயன்படுத்துங்கள். உதடு கருப்பாக, உள்ளவர்கள் இந்த வழி உங்களுக்கு உதவியாக இருக்கும்.
 
சிறிது கொத்தமல்லி இலைகள், தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சரிசமமாக எடுத்துக் கொண்டு நன்கு அடித்து, பின் அதில் 1 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும்.
 
தேவையான பொருட்கள்: சிறிதளவு கொத்தமல்லி இலை/புதினா இலை, 1/2 கப் தயிர்.
 
செய்முறை: கொஞ்சமாக கொத்தமல்லி இலையை அல்லது புதினாவை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் 1/2 கப் தயிர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள். இந்த பேக்கை சருமத்தில் நன்றாக அப்ளை செய்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை விடுங்கள். பின் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். 
 
இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வாருங்கள். இதனால், சருமம் மிகவும் மிருதுவாகவும், முகம் பளிச்சென்றும் மாறும். மேலும் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கும், சருமத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.