செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முகம் பளபளப்பாக மின்ன மஞ்சள் ஃபேஸ் பேக் !!

மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது.


மஞ்சள் பேக் செய்ய தேவையானவை : எப்போது கடைகளில் மஞ்சள் பொடியை வாங்கி உபயோகிக்க வேண்டாம். அதில் ரசாயனம் இருப்பதால் அவற்றை உபயோகித்தால் சருமத்திற்கு நல்லதல்ல.
 
மஞ்சள் கிழங்கு வாங்கி பொடி செய்து வைத்துக் கொள்லுங்கள். இது சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. அதேபோல் தேனையும் ஒரிஜினலா என பரிசோதித்து உபயோகபபடுத்துங்கள்.
 
மஞ்சள் பொடி - 3 டீஸ்பூன், யோகார்ட் - 1 டேபிள் ஸ்பூன், தேன் - 1 டீ ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன். முதலில் யோகார்ட்டை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து நன்றாக கலக்கி பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். பின்னர் தேன் மற்றும் தேங்காய் எண்ணெய்யை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து, அதில் மஞ்சள் 2 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
 
இப்போது மஞ்சள் மாஸ்க் தயார். இதனை கண்களை தவிர்த்து முகம் முழுவதும் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரம் ஒரு முறை இதுபோல் செய்யவும். முகம் மிளிரும். முகப்பரு, மாசு, கருமை ஆகியவை நீங்கி முகம் பொலிவாக இருக்கும். 
 
முதலில் முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்திய பின், சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சோப்பானது கஷ்டப்பட்டு முகத்தில் போட்ட ஃபேஸ் பேக்கினால் கிடைக்கும் நன்மைகளைக் கெடுத்துவிடும்.