திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் பிளாக் டீ குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்...!!

பிளாக் டீ என்பது கருப்பு தேயிலையை இரசாயன கலவையில் ஆக்சிஜனுடன இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுவது. பிளாக் டீயில் 10% பாலிபீனால்கள் உள்ளது.
கடுமையான மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வந்தால் தினமும் மலம்கழிக்கும் நிலை உண்டாகி மலச்சிக்கல் தீரும்.
 
நமது தலைமுடி ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் இருப்பதற்கு நமது உடலில் இருக்கும் ரத்தத்தில் ஆன்டிஆக்சிடண்டுகள் அதிகம்  இருப்பது அவசியமாகும். பிளாக் டீ அருந்துபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் இந்த் ஆன்டிஆக்சிடண்டுகளின் உற்பத்தி அதிகரித்து அவர்களின் தலைமுடி உதிர்வை தடுக்கிறது. மேலும் தலைமுடிகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
கடுமையான வயிற்று போக்கு ஏற்படும் சமயங்களில் இளம் சூடான பதத்தில் பிளாக் டீ அருந்தி வந்தால் கடுமையான வயிற்று போக்கு ஏற்படுவது நிற்கும். வயிற்று போக்கு ஏற்பட்ட சமயத்தில் உடல் இழந்த சக்திகளை மீண்டும் பெற உதவும். செரிமான உறுப்புகளின்  செயல்பாட்டை பழைய நிலைக்கு கொண்டுவரும்.
 
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சிறந்த ஒரு பானமாக பிளாக் டீ  இருக்கிறது. இதிலிருக்கும் வேதி பொருட்கள் உடலில் எடையை கூட்ட உதவும் ட்ரைகிளிஸெரைட் கொழுப்பின் அளவை மிகவும் குறைகிறது.  இதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து எடை அதிகரிக்காமல் பாதுகாப்பதில் பிளாக் டீ முக்கிய பங்கு வகிக்கிறது.