வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

ஏன் யோகாசனம் செய்வது அவசியம் தெரியுமா!

இன்றைய கணினி உலகில் அனைவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டார்கள். "பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட  ஆசை வரும்" என்பது போல் நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.

 
 
மருத்துவரிடம் சென்று அவர் தரும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு  சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு காணப்படும். ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசனங்கள் இருப்பதாக  வல்லுனர்கள் கூறுகின்றனர். 
 
ஆசனங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை  அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள். 
 
நாம் அன்றாட வாழ்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஓவ்வொரு ஆசங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்படி எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு  முக்கியம். 
 
உலகில் எண்ணிலடங்கா ஆசனங்கள் உள்ளன. இருந்தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை செய்தாலே நம் வாழ்நாள்  முழுவதும் நோய்நொடியின்றி புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.
 
முதுகு தண்டுவடத்திற்கும் (Spinal Chord) யோகாவிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. தண்டுவடத்தின் மூலமாகவே எல்லா நரம்புகளும் பிண்ணப்பட்டுள்ளன, செய்திகளை உடலின் ஏனைய பாகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் இயங்குவதற்கும்  இத் தண்டுவடம் உதவுகிறது.
 
இச் சூழ்நிலையில் தண்டுவட பகுதியை தினமும் முறுக்கி, அப்பகுதியிலும் மற்ற பகுதியிலும் இரத்த ஓட்டத்தையும், ஆக்ஸிஜனேற்றமும் செய்யும் பொழுது உடலும், மனமும் புத்துணர்வு பெற்று வார்த்தைகளில் அடங்கா பேரின்பத்தை உணர வழிவகை செய்கிறது.
 
எப்பொழுது ஒருவருக்கு வியாதி வருகிறது என்றால் ஒரு உடலுறுப்பில் உள்ள பகுதிகளில் போதுமான அளவிற்கு இரத்த  ஓட்டமும், ஆக்ஸிஜனேற்றமும் தடையிறும் பொழுதுதான். அதனை இந்த யோக ஆசனங்களை கொண்டு, உள் உறுப்புகளை  மசாஜ் செய்வது போல இழுத்தும், சுருக்கியும், அழுத்தியும் ஏன் அந்த உறுப்புகளின் மீது நமது எண்ணத்தை குவிப்பதின் மூலமாகவும் அதன் செயல்பாடுகளை துரிதப் படுத்துகிறொம். வியாதியும் பக்கத்தில் வராமல் இருக்கிறது.