1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2024 (19:30 IST)

கோடை நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை எவை?

Foods to Avoid
கோடை காலம் தொடங்கி விட்டதால் எளிதில் ஜீரணம் ஆகும் உணவை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் நிலையில் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
 
பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை போன்ற மசாலா பொருட்கள் உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.  அதிக காரம் நிறைந்த உணவுகள் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
 
* எண்ணெயில் பொரித்த உணவுகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும். * இவை உடல் பருமன் மற்றும் கொழுப்புச்சத்து அதிகரிக்க காரணமாகும்.
 
 அதிக காஃபின் உள்ள காபி மற்றும் தேநீர் நீர் இழப்பை அதிகரிக்கும்.  இவை உடல் வெப்பநிலையை உயர்த்தும்.  இனிப்பு பண்டங்கள் மற்றும் பலகாரங்கள் உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.  இவை நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.
 
 சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் நிறைந்த குளிர்பானங்கள்  ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.  இவை நீர் இழப்பை அதிகரிக்கும்.
 
நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகள்,  புளிப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகள்,  கத்தரிக்காய், கிழங்கு வகைகள் ஆகிய உணவுகளை தவிர்ப்பது நலம்..
 
Edited by Mahendran