வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2024 (11:04 IST)

தமிழகத்தில் இன்று முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்; வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்கள் ஆகவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெயில் கடுமையாக அடித்து வருகிறது என்பதும் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

கோடை காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் மார்ச் 29ஆம் தேதி வரை தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இரண்டு அல்லது மூன்று டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு இடங்களில் வரும் 31ஆம் தேதி முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Mahendran