அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வதில் இவ்வளவு பிரச்சினைகளா?
கணினி பயன்பாடும் வேலையும் அதிகரித்துள்ள நிலையில் பலரும் அதிக நேரம் பணி செய்வதால் பல உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அமர்ந்து செய்யும் வேலைகளில் பல மணி நேரம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காண்போம்.
-
வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்பவர்கள் மன உளைச்சல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.
-
அதிகமான நேரம் வேலை செய்பவர்கள் ரிலாக்ஸ் செய்வதற்காக மது பழக்கத்திற்கு ஆளாகலாம்.
-
அதிகமான நேரம் பணியாற்றுவது அந்த நபரின் உற்பத்தித் திறனை பாதிக்கிறது.
-
அதிகநேரம் பணியாற்றுவதால் தூக்கமின்மை பிரச்சினை உண்டாகலாம்.
-
தூக்கமின்மை பிரச்சினையால் பகல்நேர சோர்வு, மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
-
அதிக நேரம் கணினி திரையை பார்த்து பணி செய்யும்போது கண்களின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகிறது.
-
அதிக நேரம் அமர்ந்த நிலையில் வேலை செய்வது முதுகு, பின் கழுத்து பகுதிகளில் வலி மற்றும் வளைவை ஏற்படுத்தும்.
-
தொடர்ந்து அதிக நேரம் மன அழுத்தத்துடன் பணி புரிவது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.