திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

உடலில் நோய் வரப்போகிறது என்பதனை அறிந்துக்கொள்ள உதவும் அறிகுறிகள்...!

கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம். தோள்பட்டை, முதுகு, குதிக்கால் இவற்றில் இறுக்கமோ, வலியோ வந்தால் உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு  தேங்கியுள்ளது என அர்த்தம்.

 
முகத்தில் அரிப்போ நமைச்சலோ இருந்தால் கூந்தல் சுத்தமில்லை என்று அர்த்தம்.
 
வயிற்றுவலியோ, பேதி போன்றவை ஏற்பட்டால் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.
 
கண்களோ, மூக்கோ தொடர்ந்து அரிக்குமானல், ஜலதோஷம் வரப்போகிறது என அர்த்தம்.
 
காதில் அதீத குடைச்சலோ, வலியோ வந்தால் காய்ச்சல் வர போகிறது என அர்த்தம்.
 
உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல், தோல் உரிதல் உண்டாகுமானால் உடலில் நீர்ச்சத்தும்,  எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.
 
தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்பு பகுதி வலிக்குமானால் அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம்  தொடங்குகிறது என அர்த்தம்.
 
கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால் உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.
 
உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடிக்கிறதென்றால் அது நீரழிவின் ஆரம்பம் என அர்த்தம்.