செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2023 (20:10 IST)

சுகர் ஃப்ரீ மாத்திரையால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தா?

சர்க்கரை நோயாளிகள் நேரடியாக இனிப்பு சேர்க்கக்கூடாது என்பதால் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சேர்த்துக் கொள்வார்கள் என்பதும் குறிப்பாக டீ காபி களில் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சேர்த்து குடிப்பார்கள் என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் சுகர் ஃப்ரீ என்பது அந்த பொருளின் பெயர் தான் என்றும் ஆனால் அதில் சுகர் இல்லை என்பது அர்த்தம் அல்ல என்றும் கூறப்படுகிறது. மேலும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட சர்க்கரையில் கெமிக்கல் கலந்திருக்கும் என்றும் அந்த கெமிக்கல் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது என்றும் கூறப்படுகிறது. 
 
செயற்கையாக தயாரிக்கப்பட்ட சர்க்கரையில் கலக்கப்படும் கெமிக்கல் எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எனவே சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சேர்க்கும் முன்னர் அதில் என்னென்ன கலந்து உள்ளது? அதை சாப்பிட்டால் ஏதேனும் விளைவு ஏற்படுமா? என்பதை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்த பின்னரே சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர் 
 
 
Edited by Mahendran