திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (19:02 IST)

நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாமா?

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பலவிதமான உணவு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் அந்த நோய் உள்ளவர்கள் ஆப்பிள் ஜூஸ் குடிக்க கூடாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
ஆப்பிளில் அதிக நார்ச்சத்து இருப்பதை அடுத்து அது செரிமானத்தை தாமதப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகமாகாமல் தடுக்கிறது. ஒரு ஆப்பிளில் 14 கலோரிகள் 27 கிராம் மாவுச்சத்து 14 கிராம் சர்க்கரை உள்ளது. ஆப்பிளில் மாவு சத்து அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் ஆப்பிளை அதிகம் சாப்பிடக்கூடாது. 
 
குறிப்பாக ஆப்பிளை ஜூஸ் வடிவில் குடிக்கக் கூடாது என்று கூறப்படுகிறது ஆப்பிள் அனைவருக்கும் பிடித்தமான பழம் என்றாலும் ஆப்பிளை பழமாக ஓரளவு நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம் என்றும் ஜூஸ் வடிவில் கண்டிப்பாக குடிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran