திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (18:40 IST)

கெமிக்கல் ஷாம்புகள் வேண்டாம்.. கூந்தலுக்கு சிறந்தது சிகைக்காய் தான்..!

Hair growth
தற்போதைய நவநாகரிக உலகில் கூந்தலுக்கு ஷாம்புகள் போடுவதால் தான் முடி கொட்டும் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும்  சிகைக்காய் உபயோகித்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  
 
ஷாம்புகள் அனைத்துமே ரசாயன கலப்புகள் இருக்கும் என்பதால் நமது பாரம்பரிய சிகைக்காய் தூளை பயன்படுத்தினால் உச்சந்தலை குளிர வைத்து உடல் சூட்டை குறைப்பது மட்டுமின்றி கூந்தலுக்கும் பளபளப்பை தரும் என்றும்  முடி கொட்டும் பிரச்சனை இருக்காது என்றும் கூறப்படுகிறது.  
 
ஷாம்புகளை பயன்படுத்தினால் பக்க விளைவுகளை ஏற்படும் ஆனால் சிகைக்காய் பயன்படுத்தினால் எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நமது பாட்டி காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும் சிகைக்காய் மீண்டும் பெண்கள் உபயோகப்படுத்த ஆரம்பித்தால் முடி சம்பந்தமான எந்த விதமான பிரச்சினையும் வராது என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran