வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By

பெண்களுக்கு சுகப்பிரசவத்தில் உள்ள சிக்கல்கள் என்ன தெரியுமா....!

இன்றைய பெண்களுக்கு எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் வந்து விட்டதால் உடலுழைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. வேலைக்குச் செல்கிற பெண்களும் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலை பார்க்கிறார்கள். அந்த வேலையிலேயே களைத்து விடுகிறார்கள். உடலியக்கமே இருப்பதில்லை.  கிராமங்களில் பிரசவநாள் வரை எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் நகர வாழ்க்கையில், கர்ப்பம் என்பதை ஏதோ ஒரு நோய் மாதிரிப் பார்க்கிறார்கள். அதிகம் நடக்க கூடாது, வேலை செய்ய கூடாது என இப்படி ஏகப்பட்ட  கட்டுப்பாடுகள். உடல் நோகாமல் அப்படியே ஒரு பொம்மை மாதிரி இருக்கிறார்கள். உண்மையில் கர்ப்பம் தரித்த 4வது மாதத்தில் இருந்தே நமது உடல்  சுகப்பிரசவத்துக்காக தயாராகத் தொடங்கும். 
 
இயற்கையாகவே பிரசவிக்கும் பெண்களுக்கு இடுப்பெலும்பு விரிய ஆரம்பிக்கும். பிரசவ நேரம் நெருங்கியதும், குழந்தையின் தலை இறங்க, இறங்க, கர்ப்பப்பை வாய் அழுத்தப்பட்டு, ‘பிராஸ்டோகிளான்டின்’ எனப்படுகிற ஹார்மோன் சுரக்க ஆரம்பித்து, வலியைத் தூண்டும், கர்ப்பப்பை சுருங்கி, விரிந்து, தலை வெளியே  தள்ளப்பட்டு குழந்தை பிறக்கும்.
 
சிலருக்கு பிரசவ தேதி நெருங்கியும் வலி வராது. அவர்களுக்கு மருந்து அல்லது மாத்திரை வைத்து வலியை வரவழைப்பதுண்டு. இடுப்பெலும்பு மற்றும் கர்ப்பப்பை வாய் விரிவடையாத நிலையில், அவர்களுக்கு சிசேரியன்தான் செய்ய வேண்டி வரும். 
 
கர்ப்பம் உறுதியான 3வது மாதத்தில் இருந்து, அந்தப் பெண்ணுக்கு மாதம்1கிலோ எடை கூட வேண்டும். மொத்த கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடையானது 10 கிலோதான் இருக்க வேண்டும். அதை மீறி எடை கூடும்போது அதன் விளைவாக பிரசவத்தில் சிக்கல்கள் வரலாம். எனவே கொழுப்பு, இனிப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்து, இயற்கையாக கிடைக்கும் கோதுமை, கீரை, காய்கறி, பழங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளுதல் அவசியம்.