1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2021 (10:29 IST)

உப்பு சப்பு இல்லாத ஓட்ஸ்... இத சாப்பிட்றதுக்கு சும்மாவே இருக்கலாம்!

நீரிழிவு நோயாளிகள், உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

 
இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவு என ஆகிவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டில் ஓட்ஸ் இல்லை. ஆனால் இன்று ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்பனை ஆகிறது.  
 
ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகவும், ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் விளையும் ஒரு பயிர். அதை அப்படியே உணவாக சாப்பிட முடியாது. சில வழிமுறைகளில் தட்டையாக மாற்றப்படுகிறது. அதையும் கூட நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்துக்கொள்ள முடியாது. 
 
சில கிராம் மட்டுமே (ஸ்பூன் அளவு) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம். அதிலும் சத்து எதுவும் கிடையாது. பசியை கட்டுபடுத்தும் குணம் மட்டுமே இதற்கு உண்டு. 
 
அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸ்-ஐ விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது. சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமம். எனவே ஓட்ஸ் சாப்பிடுவதை விட பாரம்பரிய உணவான ராகி, கம்பு, சோளம், திணை, வரகு, சாமை ஆகியவற்றை உண்ணலாம்.