1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2024 (18:30 IST)

பச்சை முட்டையை குடிக்க கூடாது.. ஏன் தெரியுமா?

eggs
பச்சை முட்டையை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுகிறது. மேலும் பச்சை முட்டையை குடிப்பதால் சில பிரச்சனைகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
 
பச்சை முட்டைகளில் சால்மொனெல்லா பாக்டீரியா இருக்கலாம். இது வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும்  பச்சை முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரதங்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
ஒருவேளை பச்சை முட்டையை குடிப்பதாக இருந்தால் முட்டையை நன்கு கழுவவும், புதிய முட்டைகளை மட்டும் பயன்படுத்தவும், முட்டையின் ஓட்டில் விரிசல் இல்லையென்று உறுதி செய்து கொண்டு முட்டையை முழுவதுமாக விழுங்காமல், நன்கு மென்று சாப்பிடவும்.
 
பச்சை முட்டையை விட வேகவைத்த முட்டையை சாப்பிடுவது நல்லது.வேகவைத்த முட்டையில் உள்ள சத்துக்கள் எளிதில் ஜீரணமாகும். மேலும் பச்சை முட்டையை குடிப்பது பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால், மருத்துவரை அணுகவும்.
 
Edited by Mahendran