திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 நவம்பர் 2023 (12:13 IST)

ஆன்லைனில் குறைந்த விலை பட்டாசு.. ஏமாற்றும் மோசடி கும்பல்! – மக்களே உஷார்!

crackers
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆன்லைனில் பட்டாசு வெடி விற்பதாக கூறி ஏமாற்றும் கும்பல் அதிகரித்துள்ளது.



தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார. கூட இல்லாத நிலையில் பலரும் புத்தாடைகள், பட்டாசுகள் போன்றவற்றை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பலரது கையிலும் ஸ்மார்ட் போன் உள்ள நிலையில் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு பால முக்கிய ஆன்லைன் நிறுவனங்கள் சிறப்பு விற்பனையை நடத்தி ஏராளமான ஆர்டர்களை குவித்துள்ளது.

இதை பயன்படுத்திக் கொண்டு சில கும்பல்கள் பெரிய ஆன்லைன் நிறுவனங்கள் பெயரிலும், பட்டாசு நிறுவனங்கள் பெயரிலும் போலியாக கணக்கை தொடங்கி குறைந்த விலையில் பட்டாசுத் தருவதாக பணத்தை வாங்கி ஏமாற்றும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இவ்வாறாக சமூக வலைதளங்களில் குறைந்த விலையில் பட்டாசு என்று அறிவித்து ஏமாற்றும் கும்பல் குறித்து இணையதள குற்ற பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்பின் தெரியாத தளங்களில் இது போல பட்டாசுகள் துணிகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் கேஷ் ஆன் டெலிவரி முறையில் பொருட்களை ஆர்டர் செய்து, பொருட்கள் கையில் கிடைத்ததும் அதை சோதித்து விட்டு பணம் தருவதை நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K