1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (22:00 IST)

குளிர்காலத்தில் உணவில் மஞ்சள் அதிகம் சேர்க்க வேண்டும்: ஏன் தெரியுமா?

Kasthuri manjal
குளிர் காலம் தொடங்கி விட்டாலே சிலருக்கு சளி காய்ச்சல் இருமல் போன்ற நோய்கள் எட்டிப் பார்க்கும் என்பதும் அந்த நேரத்தில் உணவு விஷயத்தில் நாம் கவனமாக இருந்தால் மேற்கண்ட நோய்களைத் தவிர்த்து விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
எந்த நோயையும் தடுக்கும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியாக இருக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று மஞ்சள் 
 
மஞ்சள் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. குறிப்பாக அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜன் பண்புகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
குளிர்காலத்தில் உணவில் அதிகமாக மஞ்சள் இடம் பெறுவதை உறுதி செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்
 
இதன் காரணமாக எந்த வித நோயும் குளிர்காலத்தில் வராது குறிப்பாக தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகளிலிருந்து மஞ்சள் நிவாரணம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran