1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (11:49 IST)

கேரட்டை பச்சையாக சாப்பிடுவது நல்லதா??

காய்கறிகளில் ஸ்வீட்டான காயாக பார்க்கப்படும் கேரட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு கேரட்டை சாப்பிட்டு  வந்தால், விரைவில் செரிமான பிரச்சனை நீங்கும்.
 
கேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக்  கொள்ள உதவும். 
 
காரட்டை பச்சையாகச் சாப்பிடும்போது அது உடலில் தீங்கிழைக்கும் கொழுப்பைக் குறைத்து  உடலுக்கு நன்மை தரும் கொழுப்பை உருவாக்குகிறது. 
 
இதயத்தை ஆரோக்கியமாக வைக்க கேரட் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவானது குறைந்து,  இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.  
 
ஆரோக்கியமான கண்களை பெற கேரட் சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப்  போக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். 
 
மேலும் மாலைக் கண் நோயை தடுக்கும். புற்று  நோயிலிருந்து காக்க கேரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
 
காரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல  ஜீரண சக்திதியை தருகின்றது. எனவே கேரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம்.  
 
பல் பராமரிப்பு கேரட்டை சாப்பிட்டு வந்தால், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கலாம். அதிலும் குறிப்பாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.