வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2017 (15:16 IST)

இதயத்தை இதமாக வைத்து கொள்ள வேண்டுமா? இவற்றை பின்பற்றுங்கள்

மனிதன் உயிர்வாழ மிக முக்கியமான உறுப்பு இதயம். இதயம் நின்றுவிட்டால் அவ்வளவுதான். மேலும் இதயம் உடல் சம்பந்தப்பட்டது மட்டுமின்றி மனம், காதல், உணர்ச்சி சம்பந்தப்பட்டது, இப்படிப்பட்ட இதயத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா!



 


இதயத்திற்கு மிக இதமான உணவு பழங்கள் மற்றும் காய்கறிகள் தான். எனவே காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்து கொண்டு பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்த்தால் இதயத்தை காக்கலாம்

இதயம் இதமாக இருக்க மீன் உணவு உதவும். ஆனால் அதே நேரத்தில் மீன் உணவை எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதை தவிர்த்து குழம்பு வைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்

இதயத்தை கோளாறு செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது எண்ணெய்தான். தரமான நல்ல எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். . செக்கில் ஆட்டிய எண்ணெய் சிறந்தது.

உணவில் உப்பை அளவுடன் சேர்ப்பது இதயத்திற்கு நன்மை பயக்கும். டைனிங் டேபிளில் உப்பை வைக்க வேண்டாம். சமையல் செய்யும்போதே சரியான அளவு உப்பை போட்டுவிடுங்கள்

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவை ரொம்ப முக்கியம். இதயம் சீராக துடிக்க இவை முக்கிய காரணங்கள் ஆகும்.

இதயத்தை காக்கும் இன்னொரு விஷயம் தியானம். தியானம் செய்ய முடியவில்லை என்றாலும் தினமும் 15 நிமிடங்கள் எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருந்தால் கூட போதும்.