1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (00:23 IST)

ஆரோக்கியமான உணவுகள்....

ஆரோக்கியமான உணவு உட்கொள்ளவது என்றால் ரொட்டி, பாஸ்தா மற்றும் தானியங்கள், இதில் ஒவ்வொரு தானியம் முலைகட்டியதும் மற்றும் தவிடு சேர்ந்தது  ஆகும். 
 
பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. பல்வேறு நிறங்கள் உடைய பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுப்பதன்  மூலம் அதிகமான ஊட்டச்சத்துகளை பெற முடியும். 
 
பழச்சாறுகளை காட்டிலும் முழு பழங்கள் அல்லது காய்கறிகளை சாப்பிடுவது நல்லது, ஏனெனில் இது அதிக நார்சத்து கிடைக்கும். பழம் மற்றும் காய்கறிகள் உண்பதன் மூலம் இதய நோய், வகை 2 நீரிழிவு, மற்றும் புற்றுநோய் ஆகியவை வராமல் பாதுகாக்க முடியும் என்று ஆராய்ச்சி கூறுகின்றது.
 
உடலில் திசுக்களை சரிசெய்வதற்கு முக்கியமானது, புரதம் நிறைந்த உணவுகள் பலவற்றில் இரும்பு, மக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற கனிமங்களைக்  கொண்டிருக்கின்றன.
 
புரதங்கள் நிறைந்த உணவுகளாக இறைச்சிகள், மீன், மற்றும் முட்டைகள் ஆகியவை கூறப்படுகின்றது.  பீன்ஸ், நட்ஸ், சோளம் மற்றும் சோயா ஆகியவை ஒரு சைவ உணவு உண்பவர்களுக்கு புரத உணவுகளாக உள்ளது.
 
கால்சியம் நிறைந்த உணவு ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு ஊக்குவிக்கிறது.  பால் பொருட்கள் கால்சியம் சத்துக்கு ஆதாரமாக உள்ளன. குறைந்த  கொழுப்பு பால், தயிர் மற்றும் சீஸ் பரிந்துரைக்கப்படுகிறது.
 
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
 
அளவான உணவை எடுத்து கொள்ள வேண்டும். பதப்படுத்தபட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். செயற்கையான சர்க்கரை உண்ண கூடாது. விலங்குகளில் இருந்து வரும் கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
 
சோடியம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியம் இல்லாத உணவை தவிர்ப்பதே நாம் உடக்குக்கு செய்யும் பெரிய கைமாறு ஆகும்.