வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அன்றாடம் அரைக்கீரை சாப்பிட்டு வருவதால் உண்டாகும் பயன்கள் !!

அரைக்கீரையை நீர்விட்டு அலசி நெய்விட்டு வதக்கி தினமும் காலை உண்டு வந்தால் ஆண்மை பெருகும். உடல் பலம் அதிகரிக்கும்.

அரைக்கீரை ஆரம்ப நிலையில் உள்ள மனநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது. வாதநோய் உள்ளவர்கள் அரைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதநோய் குறையும்.
 
அரைக்கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது.குடல் புண்கள் விரைவில் குணமாகும். அரைக்கீரையில் உள்ள இரும்புசத்து நரம்பு  தளர்ச்சியை சரிசெய்து நரம்புகளுக்கு பலத்தை அளிக்கிறது.
 
இந்த அரைக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து, உடல் வலுவை தரும்.தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இந்த அரைக்கீரையை தொடர்ந்து உண்டு வராலாம்.நல்ல  பலன் கிடைக்கும். 
 
பொதுவாக பத்திய சாப்பாடு உண்பவர்களுக்கு இந்த அரைக்கீரை மிகவும் சிறந்தது. நோயால் துவண்டு போன உடலை வலுப்படுத்தும் சக்தியும் இந்த அரைக்கீரைக்கு உண்டு.வாயு மற்றும் வாத நீர்களையும் சரிசெய்கிறது.
 
அரைக்கீரையை தினமும் உண்டு வந்தால் தேக பலமும்,ஞாபக சக்தியும் அதிகரிக்கும். இதயம் வலிமை பெறும்.குடல் சுத்தமாக இருக்கும். சித்த மருத்துவதிலும் இந்த அரைக்கீரையின் பங்கு மிகவும் முக்கியதூவம் வாய்ந்தது. இந்த விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்தது.
 
இந்த கீரையை தொடர்ந்து, உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நூரையீரல் நோய்கள் நீங்கும். வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரிசெய்யும்.  நரம்புகளை வலுப்படுத்தும்.