வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 11 ஜூன் 2017 (16:32 IST)

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள் இவை தான்: தெரிஞ்சிகோங்க!!

வெறும் வயிற்றில் ஒரு சில உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியமானது. அவை என்வென்பதை இங்கு காண்போம்...


 
 
# வெறும் வயிற்றில் டீ, காபி பருகுவது தவறான பழக்கம். எனவே, டீ, காபி குடிப்பதற்கு முன்பாக வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது நல்லது.
 
# வெறும் வயிற்றில் சாக்லேட், சுவீட்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை சாப்பிடக்கூடாது. 
 
# வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடக்கூடாது. இது வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.
 
# வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடக்கூடாது. இது வயிற்றில் உள்ள அமிலத்துடன் கரைந்து வயிற்று படலத்தை அரிக்க தொடங்கிவிடும். 
 
# வாழைப்பழத்தையும் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருக்கிறது. சிலரது உடலுக்கு இது ஒத்துக்கொள்ளாது.
 
# தக்காளியையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதனால் அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
 
# காரமான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இது  செரிமான கோளாறுகளையும் எரிச்சலை ஏற்படுத்தி விடும். 
 
# குளிர்பானங்களையும் வெறும் வயிற்றில் பருகக்கூடாது. இது வயிற்று பகுதிக்கு செல்லும் ரத்தத்தின் அளவை குறைத்து விடும்.