ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (19:00 IST)

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவர் தினசரி 3 முதல் 5 கப் காபி வரை அருந்தலாம். இந்த அளவுக்கு மேல் பருகுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில், மனித உடலுக்குத் தேவையான காஃபின் அளவு ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் மட்டுமே, இது தோராயமாக 4 கப் காபிக்கு சமம்.
 
தினமும் 5 கப் காபிக்குள் அருந்துவது பாதுகாப்பானது. இந்த அளவு சில ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கலாம்.இந்த வரம்பை மீறி காபி குடிப்பது எதிர்மறையான உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
 
4 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு, தினசரி காஃபின் அளவு வெறும் 45 மில்லி கிராம் மட்டுமே இருக்க வேண்டும். இது ஒரு சிறிய டார்க் சாக்லேட் துண்டுக்குச் சமம்.
 
எனவே, காபியை மிதமான அளவில் குடிப்பது அதன் நன்மைகளை பெறுவதற்கு உதவும். அதேசமயம், அதிகப்படியான நுகர்வு உடல்நலனுக்குப் பாதகமாக அமையலாம்.
 
Edited by Mahendran