செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 மே 2021 (15:36 IST)

உடல் சூட்டை குறைக்கும் பழங்களில் முதன்மையான தர்பூசணி !!

கோடை காலத்தில் வெயிலுக்கு இதமாக உடல் சூட்டை குறைக்கும் பழங்களில் தர்பூசணி முதன்மையானது. வைட்டமின், தாதுக்கள், கார்போஹைட்ரெட், இரும்பு சத்துக்கள் தர்பூசணியில் நிறைந்து காணப்படுகிறது.
 
கண் குளிர்ச்சிக்கு தர்பூசணி சிறந்த மருந்தாகும். ரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் பொட்டாசியத்தின் அளவை கட்டுக்குள்  கொண்டு வரலாம்.
நீரிழிவு நோய், இதயநோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.
 
கோடைகாலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறைந்து ரத்த ஓட்டம் வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில்  தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
 
தர்பூசணி பழத்தில் சிட்ருலின் சத்து அதிகம் உள்ளது. இது தர்பூசணி பழத்தில் வெள்ளையாக இருக்கும் பகுதியில் அதிகம் உள்ளது. எனவே பழத்தை சாப்பிடுவதோடு இந்த வெள்ளை பகுதியை சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடுகளை போக்க முடியும்.
 
வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது. தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர் சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை தீருகிறது.