ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2017 (01:05 IST)

படுக்கை அறையில் என்னென்ன இருக்க வேண்டும்?

வீடு என்பதே நாம் நிம்மதியாக வாழ வேண்டிய ஒரு இடம். அதில் நம் அன்புக்குரியவர்களும் நம்முடன் இருப்பார்கள். எனவே  வீட்டை எந்த அளவுக்கு தூய்மையாக வைத்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு வீட்டில் இன்பமும் சந்தோஷமும் நிறைந்து இருக்கும்




பொதுவாக பலர் பூஜை அறையை மட்டுமெ சுத்தமாக வைத்திருப்பார்கள். கிட்டத்தட்ட அனைவருமே ஏனோதானோ என்று வைத்திருக்கும் அறை படுக்கை அறைதான்.  குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், ஸ்கூல் பேக் முதல், லேப்டாப், டி.வி ரிமோட், அழுக்குத்துணி என சகலமும் படுக்கை அறையில் இருப்பதால்தான் பலருக்கு தூக்கம் வருவதில்லை. எனவே பூஜை அறைக்கு இணையாக சுத்தமாக அமைதியாக படுக்கை அறையை வைத்துக்கொள்ள வேண்டும்/

படுக்கை அறையில் என்னென்ன இருக்க வேண்டும் என்று தெரியுமா?

1. ஒரு உண்மையை சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள். மனவியல் ஆய்வின்படி படுக்கை அறையில் கட்டில், படுக்கையை தவிர வேறு எதுவும் இருக்க கூடாது என்றுதான் ஒரு சர்வே கூறுகிறது. தூக்கம், குடும்ப உறவு இரண்டுமே மனித வாழ்வில் முக்கியமானது என்பதால் இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்

2. தயவு செய்து படுக்கை அறையில் எந்த காரணத்தை கொண்டு டிவியை வைக்க வேண்டாம். வேண்டுமானால் மெல்லிய இசையை வைத்து கொள்ளலாம்

3.மேலும் படுக்கை அறையை எந்த காரணத்தை கொண்டும் நூலகமாக மாற்ற வேண்டாம். படுக்கையில் படுத்து கொண்டு புத்தகம் படிப்பதால் கண்களுக்கு தீமை விளைவிக்கும்

4. படுக்கை அறையில் சண்டை போட வேண்டாம்.  வாதம் செய்வது போன்றவற்றைப் படுக்கை அறையில் வைத்துக் கொண்டால் அந்த இடத்தின் நல்ல அதிர்வுகளைக் கெடுக்கும். படுக்கை அறையில் சண்டை போடவே கூடாது.

5.  படுக்கை அறையின் சுவர், அமைதியைத் தரக்கூடிய வெளிர் நிறங்களாக இருக்க வேண்டும். படுக்கை அறையில் புகைப்படங்கள், ஓவியங்கள் வைக்கலாம். அமைதி, மகிழ்ச்சியைத் தரக்கூடிய இயற்கை காட்சிகள், புகைப்படங்களை வைக்கலாம்.