ரீஃபைண்ட் ஆயிலில் உள்ளது அதிக ஆபத்து…

ரீஃபைண்ட் ஆயிலில் உள்ளது அதிக ஆபத்து…


Sasikala| Last Updated: வியாழன், 14 ஜூலை 2016 (14:36 IST)
நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய், தேங்காயிலிருந்து வருவதில்லை என்றும், பிராய்லர் சிக்கன் மற்றும் அவற்றில் பயன்படுத்தப்படும் நிறமிகளினால் எவ்வளவு ஆபத்து ஏற்படுகிறது என்றும், நாம் அறிவோம்.

 


அவை போன்றே நாம் இன்று வீடுகளில் பயன்படுத்தும் ரீஃபைண்ட் ஆயிலைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
 
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாக்கெட்டுகளில், டின்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் நிறமற்ற எண்ணெய்களின் நிலையும் இதுதான். எண்ணெய் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களின் விலைக்கும், எண்ணெய் விலைக்கும் எந்த தொடர்பும் இருக்காது. அதன் மூலமே எண்ணெய்களின் தன்மையை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
 
கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் இவை எல்லாவற்றிலும் ‘லிக்யூட் பாரபின்’ என்ற பெட்ரோலிய கழிவுப் பொருள் கலந்துள்ளது. எந்த எண்ணெய் எந்த நிறத்தில் எந்த மனத்தில் வேண்டுமோ அவ்வாறு மாற்றிக் கொள்ளலாம். நாம் வீடுகளில் உண்ணும் கேசரி எந்த நிறத்தில் தேவையென்றாலும் அந்தந்த நிறத்தில் உள்ள பவுடர்களை போட்டு கலர்கலராக தயாரிக்கிறோம். அதற்கு வாசனை தேவையென்றால் நமக்குப் பிடித்த ஃப்ளேவர்களை கடைகளில் வாங்கி சேர்த்துக் கொள்கிறோம். 
 
அதுபோலத்தான் கலங்கிய நிலையில் உள்ள லிக்யூட் பாரபினை நிறமற்றதாக அல்லது நமக்குப் பிடித்த நிறத்தில் மாற்றுகிறார்கள். அதன்மீது எந்த எண்ணெய் லேபிள் ஒட்டப்படுகிறதோ அதற்குத் தகுந்தாற்போல் அதன் மணத்தைத்தரும் ஃப்ளேவர்களை சேர்க்கிறார்கள். 
 
எண்ணெய் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களை விட பல மடங்கு விலை குறைவான லிக்யூட் பாரபினை எண்ணெய்யில் கலப்பதால், அதன் அடக்கவிலை குறைந்து விடுகிறது. மார்க்கெட்டில் போட்டிபோட்டுக் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் மிகக் குறைவான விலைக்கு எண்ணெயை விற்பனை செய்கிறார்கள். மக்கள் நலம் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. 
 
சித்த மருத்துவ தைலம், ஆயுர்வேத தைலம் என்று பேருந்துகளில் விற்கப்படும் தலைவலி, பல்வலி தைலங்களில் ஃபாரபின் கலக்கப்படுகிறது. சமையல் எண்ணெய் முதல் மருத்துவப் பொருட்கள் வரை பெட்ரோலிய கழிவுப் பொருட்களின் கலப்படமாக உள்ளது. உடல் குளிச்சிக்காக நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெய் மட்டும் உடல் குளிர்ச்சியை எப்படித் தரும். சாதாரண ஒரு பொருட்களில் இருந்து எண்ணெய் எடுக்க வேண்டும் என்றால் 
அந்தப் பொருளை காயவைத்து அரைத்து எடுப்பார்கள். ஆனால் ரீபைண்ட் ஆயிலைப் பொறுத்தவரை இப்படி அரைப்பதற்குப் பதிலாக வேறு முறையில் தயாரிக்கிறார்கள். 
 
முதலில் எண்ணெய் வித்துக்களை பிரித்தெடுத்து பின்பு நீராவி முறையில் 110 முதல் 180 டிகிரி வரை வெப்ப நிலையை ஏற்படுத்தி அதன் பின்பு எண்ணெய் பிரித்தெடுக்கிறார்கள். வித்துக்களில், எஞ்சியுள்ள எண்ணையையும் பிரித்தெடுக்க ‘ஹெக்சேன்’ என்னும் ரசாயனப்பொருள் பயன்படுத்துகிறார்கள். இந்த ஹெக்சேன் என்பது பெட்ரோலிய கச்சா எண்ணெயில் இருந்து கிடைக்கும் ஒரு கழிவுப் பொருளாகும். இதை மேலும் சுத்தப்படுத்த ’பாஸ்பேட்’ என்னும் வேதிப்பொருளையும் பயன்படுத்துவார்கள். பின்பு காஸ்டிக் சோடா அல்லது சோடா ஆஷ் மூலம் எண்ணெயின் மணம் நீக்கப்படுகிறது. பிறகு ரசாயனம் கொண்டு சலவை செய்து, தண்ணீர் போன்ற நிறமற்ற, மணமற்ற, திரவமான எண்ணெய் மாற்றப்படுகிறது. இதை 500 டிகிரி அதற்கு மேலும் கொதிக்க வைத்து, பின்பு குளிரவைத்து ரீஃபைண்ட் ஆயில் தயாரிக்கப்படுகிறது. 
 
இப்படி கொதிக்க வைத்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது என்பது நாம் அறிந்ததே. மேலும் சில சத்துக்கள் மிஞ்சி விடக்கூடாது என்பதற்காக சிட்ரிக் அமிலம் ஃரீபைண்ட் ஆயிலுடன் சேர்க்கப்படுகிறது. 
 
இயற்கையான சத்துக்கள் எல்லாம் அழிக்கப்படுகின்றன. ஆனால் உலகின் எந்த ஒரு பரிசோதனைக் கூடத்தில் ஃரீபைண்ட் ஆயிலை ஆய்வு செய்தாலும், எல்லா சத்துக்களும் இருக்கிறது என்று நிரூபணம் செய்யவும், மக்களை கவர்வதற்காகவும், செயற்கை ரசாயன சத்துக்கள் அதில் சேர்க்கப்படுகின்றன. 
 
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் குறைந்த அளவு பெட்ரோலிய கழிவுகளை உணவுப்பொருட்களில் கலப்பதற்கு அரசு அனுமதியே உள்ளது. அப்படி இருக்கும் போது, எந்தெந்த கம்பெனிகளுக்கு எவ்வளவு லாபம் வேண்டுமோ அந்த அளவு கலப்படம் செய்துக்கொள்ள வேண்டியதுதான் ஆனால் இன்றைய நிலையில் உணவுப் பொருட்கள் எங்கு விளைகிறது, அதை தயார் செய்யும் முறை பற்றி வெளிப்படையாக தெரிவதில்லை. எங்கோ வெளிநாடுகளில் அயல் நாட்டு நிறவனங்கள் மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளை குறிவைத்து தங்கள் வியாபாரத்தை நடத்துகின்றன.

லாபம் ஒன்றே குறிக்கோள் என்பதால் மக்கள் உடல் நலனைப் பற்றி யாருக்கு 
என்ன கவலை இருக்க முடியும். அதனால், நம் கண்முன்னால் விளையும், தயாரிக்கப்படும் உள்நாட்டு உணவுப் பொருட்களில் தரமானதை வாங்கி உண்டு நோயற்ற வாழ்வை வாழ்வோமாக…!
 


இதில் மேலும் படிக்கவும் :