1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala

அப்படியா?..கவலைக்கும் உள் உறுப்புகளுக்கும் சம்பந்தம் உண்டா?

இனிப்பு என்ற சுவை நாக்கில் படும்பொழுது சுவை மொட்டுக்கள் அதை மண் பிராணசக்தியாக மாற்றி உடல் முழுவதும்  அனுப்புகின்றன. மண் பிராணசக்தி மூலமாக இயங்கும் உறுப்புகள் இரைப்பை, மண்ணீரல், உதடுகள். இனிப்புக்கும் கவலைக்கும் சம்பந்தம் உண்டு.

 
நமது உதடும் மண்ணீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும். உதட்டில் ஏதாவது புண் ஏற்பட்டால் அதற்குக் காரணம் வயிற்றில் புண் இருப்பது. வயிற்றில் ஏற்படும் உபாதைகளுக்கு உதட்டிலே அறிகுறி தெரியும். எனவே, உதட்டில் வரும் நோய்களுக்கு உதட்டில் மருந்து தடவுவதால் குணம் பெற முடியாது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதால் மட்டுமே தீர்வு காண  முடியும்.
 
கவலைக்கும் மண் பிராணனுக்கும் சம்பந்தம் உண்டு. சிலர் மனதில் கவலை வந்தால் சாப்பிட மாட்டார்கள். கவலை என்ற  உணர்ச்சி உடலில் மண் சம்பந்தப்பட்ட பிராண சக்தியை அதிகமாக ஈர்த்துக் கொள்வதால் ஜீரணத்திற்கான சுரப்பிகள் சுரப்பதில்லை. அதனால் பசி எடுப்பதில்லை. இப்படிக் கவலையாக இருக்கும்பொழுது உணவைச் சாப்பிட்டால் வயிறு அதிகமாகக் கஷ்டப்பட்டு, கவலை அதிகமாகும். எனவே, கவலை வந்தால் வயிற்றுக்கு உணவு கொடுக்காதீர்கள்! எப்பொழுது பசிக்கிறதோ அப்பொழுது மட்டுமே சாப்பிடுங்கள்! எப்பொழுது பசி என்ற உணர்ச்சி இருக்கிறதோ அப்பொழுது கவலை இருக்கவே இருக்காது. கவலையும் பசியும் எதிரிகள். 
 
வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எவருக்கும் எந்த விஷயத்திற்கும் கவலை வராது. சிறுநீரகத்தை  ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எவருக்கும் பயம் என்கிற உணர்ச்சி வராது. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்  கொள்ளும் நபருக்குக் கோபம் வராது. ஞானிகள், முனிவர்கள் ஆகியோருக்குக் கோபம், பதற்றம், பயம், கவலை ஆகியவை வருவதில்லை. ஏனென்றால், அவர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள்.