1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
  4. Natural antibiotics medicine you know?

இயற்கை ஆண்டிபயாடிக்ஸ் எவை எவை என தெரியுமா?

natural
நோய் வந்த பெரும்பாலானவர்கள் தங்களையெ ஒரு டாக்டராக நினைத்து கொண்டு மெடிக்கல் ஷாப்புகளில் தேவையான மருந்துகளை சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இவர்களில் ஒருசிலர் பெயின் கில்லர், ஆண்டிபயோடிக், வைட்டமின் போன்ற வார்த்தைகளையும் தெரிந்து வைத்திருப்பார்கள்.



இவைகளில் ஆண்டிபயாடிக்ஸ் என்பது நோய் எதிர்ப்பு தரும் வல்லமை உடையது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும் என்பது தெரியவில்லை. ஆனால் உண்மையில் ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் நமது இயற்கை தாவரங்களில் இருக்கின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும?

பல ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர்கள் சாப்பிட்ட , மூலிகை இலை, தண்டு, வேர், காய், விதை உள்ளிட்டவற்றை மருந்தாக, கஷாயமாக, லேகியம் ஆகியவைதான் தற்போது பவுடர் வடிவில், சிரப் வடிவில், மாத்திரை வடிவில் காப்புரிமை பெற்று வருகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்

இஞ்சி, செம்பருத்தி, தேன், மாதுளம்பழம், பூண்டு, மஞ்சள், முட்டை கோஸ், எலுமிச்சம்பழம், தயிர், அன்னாசி பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தாலே போதும், இதில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான ஆண்டிபயாடிக்ஸ் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயை அண்டவிடாது. மருந்து மாத்திரையும் தேவைப்படாது.
About Writer
sivalingam
அடுத்த கட்டுரையில்
பெண்களின் சருமத்தை அழகூட்டும் இயற்கை பொருட்கள்