வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Modified: புதன், 15 மார்ச் 2017 (00:23 IST)

மொபைல் போனுக்கும் சர்க்கரை நோயுக்கும் என்ன சம்மந்தம்? திடுக்கிட வைக்கும் ஆய்வு

பொதுவாக நீரிழிவு நோய் என்று கூறப்படும் சர்க்கரை நோய் பரம்பரையாகவும், சரியான உணவு பழக்கவழக்கம் இல்லாத காரணத்தாலும், உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு அதிகம் இல்லாத காரணத்தாலும் வரும் என்பது அனைவரும் தெரிந்ததே.




 


ஆனால் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆய்வு நிறுவனம் சமீபத்தில் எடுத்த ஆய்வின்படி அதிக நேரம் டிவி, கம்ப்யூட்டர், மொபைல் போன்களை பார்த்து கொண்டிருந்தாலும் நீரிழிவு நோய் வரும் என்பதை கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக இந்த பழக்கங்கள் உள்ள குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வரும் என்று தெரிய வந்துள்ளது

இந்த ஆய்வின் முடிவின்படி இந்த ஆய்வில் 37% குழந்தைகள் மட்டுமே ஒரு மணி நேரத்துக்கு குறைவாக டிவி மற்றும் மொபைல் ஸ்க்ரீன்கள் முன் செலவிடுகிறார்களாம். 22 % குழந்தைகள் தினசரி மூன்று மணி நேரத்துக்கு மேலாக ஸ்க்ரீன்கள் முன் செலவிடுவதாக இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது 5-ல் 1 குழந்தை தினசரி மூன்று மணி நேரத்துக்கு மேல் டிவி அல்லது மொபைல் ஸ்க்ரீன்கள் முன் நேரத்தை செலவிடுவதாகவும், இதன் காரணமாக குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

எனவே பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் தொடர்ச்சியாக டிவி, கம்ப்யூட்டர், மொபைல் போன் கேம்ஸ் ஆகியவை முன்னர் மூன்று மணி நேரம் இருக்காமல் பார்த்து கொள்ளுங்கள். அவர்களுடன் மனம் விட்டு பேசுவது, விளையாடுவது, வெளியே அழைத்து செல்வது ஆகியவற்றின் மூலம் இவற்றை தவிர்க்கலாம்