1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 30 மே 2016 (17:17 IST)

எண்ணெய் தேய்து குளிப்பதன் பலன்கள்

எண்ணெய் தேய்து குளிப்பதன் பலன்கள்

இப்போது எல்லாருக்குமுள்ள பெரும் பிரச்சனை தலைமுடிதான். மிக இளம் வயதிலேயே இப்போது பலருக்கு முடி நரைத்து விடுகிறது. இன்றைய அவசர உலகத்தில் டென்ஷன் நிறைந்த வாழ்ககையால் முடி நரைப்பது என்பது மிக இளம் வயதிலேயே ஏற்பட்டுவிடுகிறது.


 

 
தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊற வைத்து சீயக்காய் போட்டு இளம் சூடான நீரில் குளிப்பதால் இந்த முடி கொட்டும் பிரச்சனையைச் சமாளிக்கலாம்.
 
சிறுவயதில் இருந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால் முடி நரைப்பது தள்ளிப் போகிறது. இளம் வயதிலேயே நரைப்பதை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் தடுக்க முடியும்.
 
தலையில் பொடுகு ஏற்படுவது இன்னொரு பிரச்சனை. வாரத்தில் ஒருநாளாவது தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இந்தப் பொடுகுப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணலாம்.
 
காலை நேரத்தில்தான் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அப்போதுதான் அதிகம் வியர்க்காது. அப்படி நீங்கள் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்கும்போதே எண்ணெய்யின் குளிர்ச்சியை உங்களால் உணர முடியும்.
 
வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் வேனல் கட்டிகள், கொப்புளங்கள், வேர்க்குரு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
 
எண்ணெயை அழுத்தித் தேய்ப்பதன் மூலம் அது தோலில் உள்ள மேல் அடுக்குகளுக்குள் சென்று பல் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது. வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டுள்ள அழுக்குகளையும், நுட்பமான அடைப்புகளையும் வெளியேற்றுகிறது. இதனால் உடலில் பல உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்பட வழி எற்படுகிறது.
 
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியடைகிறது. அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. உடலில் சூடு குறைவதால் மனம் ரிலாக்ஸ் ஆகிறது உடல் ரிலாக்ஸ் ஆகிறது. நல்ல இயற்கையான தூக்கம் வருகிறது.
 
யாரெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது?
 
மிகச் சிறிய குழந்தைகலை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டக் கூடாது. ஏனென்றால் மூக்கு வழியாகவும், காது வழியாகவும் எண்ணெய் உள்ளெ போய்விடும். இதனால் சைனஸ் தொந்தரவு உள்லவர்கள் எண்ணெஉ தேய்த்துக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே குளித்தாலும் மிதமான சுடுதன்ணீரில் குளிக்க வேண்டும்.