வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala
Last Modified: சனி, 30 ஜூலை 2016 (12:10 IST)

அக்குபங்க்சரில் குணமாகும் சைனஸ் (Sinusitis)!!

அக்குபங்க்சரில் குணமாகும் சைனஸ் (Sinusitis)!!

தலைவலி, மூக்கடைப்பு, தும்மல், கண்களில் வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டு தாங்கமுடியாமல் தவிப்பவர்கள் ஏராளம். அவர்கள் வலியுடன் கூறும் ஒரே வார்த்தை 'சைனஸ் தரும் தொல்லை தாங்கமுடியவில்லை' என்பது தான். 


 
 
மூக்கு மற்றும் கண்களை சுற்றி துளைகள் உள்ளன, அந்த துளைகளுக்கு சைனஸ் (Sinus) என்று பெயர். இந்த சைனஸ் துளைகள்தான் நம்மை பக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளிடம் பாதுகாத்து வைக்கின்றன. எப்போது இந்த கிருமிகள் பலம்பெற்று தொற்றாக மாறி நம் உடலை தாக்க துவங்குகிறதோ அப்போது அந்த சைனஸ் துளைகளில் அடைப்பு ஏற்பட்டு திரவமாக தங்கிவிடும். இதனால் முகவீக்கம், பெரும்தலைவலி, மூக்கடைப்பு போன்றவை ஏற்படுகின்றன. 
 
காலையில் அதிக தலைவலி, உடல்வலி மற்றும் சோர்வு, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தொடர் இருமல், கெட்டி சளி, தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, நெற்றிப்பகுதியில் வலி, காய்ச்சல் போன்றவை இந்த சைனசின் அறிகுறி. 
 
இந்த சைனஸ் (Sinusitis) பிரச்சினையை அக்யுபங்க்சர் கொண்டு சரிசெய்யமுடியும்!. 
 
கொடுக்கப்பட்டுள்ள அக்குபஞ்சர் புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ ௭ முறை கடிகார சுற்றும் ௭ முறை எதிர் கடிகார சுற்றுமுறையில் அழுத்தம் கொடுக்கவேண்டும். அவ்வாறு புள்ளிகளை தூண்டுவதன் மூலம் சைனசுக்கு தீர்வு காணலாம். 
 
அக்கு புள்ளிகள்: SP 6, LI 11, DU 20, LI 19, LI 20, LI 4 
 
-த.நா.பரிமளச்செல்வி, 
அக்குபஞ்சர் மருத்துவர்