ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 10 அக்டோபர் 2016 (11:09 IST)

சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !!

சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !!

நரம்பு வேர் பகுதியில் ஏற்படும் ஒருவகை பிரச்சினை, இது நரம்பு மண்டலம் சுருங்குவதால் ஏற்படுகிறது. இதனால் முதுகுப்புறம் வலி உண்டாகும்.


 


இந்த வலி கால் பகுதி வரை சென்று இழுத்து வலிக்கும், ஒருசிலருக்கு இடுப்பில் இருந்து பக்கவாட்டிலும் வலி இருக்கும். வலி விட்டு விட்டு வரும். கால் பலமிழந்து காணப்படும். 
 
சயாடிக்கா எனப்படும் இந்த நரம்பு, இழுத்து இழுத்து வலி ஏற்படுத்துவதால் Sciatica Pain என மருத்துவர்களால் குறிப்பிடப் படுகிறது. இந்த வலி இருந்துக்கொண்டே இருக்கும், இடுப்பில் இருந்து ஒரு கம்பியை செருகியது போல ஒருவித வலியை உணரலாம். அதாவது இந்த சயாடிக்கா எனப்படும் நரம்பு செல்லும் பாதை முழுவதும் வலி இருந்துக்கொண்டே இருக்கும். சிலருக்கு முதுகில் உணர்வு குறைபாடு வரும். 
 
அறிகுறிகள்:
 
- கீழ் முதுகு வலி (Low Back Pain) 
- உட்காரும்பொழுது வலி 
- இடுப்பு வலி 
- காலில் எரிச்சல் அல்லது மதமதப்பு ஏற்படும் 
- கால் மற்றும் பாதத்தில் வலி ஏற்படும் 
- எழுந்து நிற்கும்பொழுது குத்தி குத்தி வலி
 
காரணங்கள்:
 
- டிஸ்க் பல்ஜ் (Disc Bulge) 
- அடிபட்டால் 
- தண்டுவட கட்டி 
- Herniated Disc 
- நீண்ட நேரம் ஒரே நிலையில் பணி
 
இத்தகைய சயாட்டிக்கா வலிக்கு அறுவை சிகிச்சை இல்லாமலேயே அக்யுபங்க்சர் மூலம் எளிய முறையில் நிறந்தர தீர்வை பெறலாம். 
 
கீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுப்பது சயாட்டிக்கா வலியை போக்கும்.

அக்கு புள்ளிகள்: UB28, UB30, UB 40, UB65, GB 30, si3

-த.நா.பரிமளச்செல்வி, 
அக்குபஞ்சர் மருத்துவர்