வலியுடன் கொண்ட மாதவிலக்கு (Dysmenorrhea) - அக்குபஞ்சரில் தீர்வு
மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு அக்குபங்க்சர் தீர்வு
பெண்களின் வாழ்கையில் மாதவிடாய் என்பது மிகவும் இயற்கையான ஒன்று, ஆனால் மாதாமாதம் அவர்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவஸ்தைகள் ஏராளம்.
அதில் மிகவும் முக்கியமான ஒன்று "சூதகவலி" எனப்படும் வலியுடன் கொண்ட மாதவிலக்கு இதனை ஆங்கிலத்தில் (Dysmenorrhea - டிஸ்மெனோரியா ) ஆகும். பெண்களின் ௧௮ (18) வயது முதல் ௨௫ (25) வயது வரை இந்த வலி பாடாய் படுத்தும்.
இந்தவலியை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்! அதில் ஒன்று திருமணம் ஆனா பெண்களின் வலி, இரண்டாவது திருமணம் ஆகாத பெண்களின் வலி என. திருமணம் ஆன பெண்களின் மாதவிடாய் கால வலி என்பது கர்பப்பையை சுற்றியே இருக்கும்! இந்த வலி 3 அல்லது 4 நாட்கள் முன்னதாகவே வந்துவிடும், வலி வந்து மாதவிடாய் ஆனா பிறகு தான் இந்த வலி மறையும்! அதிக உடலுழைப்பு இல்லாத பெண்களுக்கு இந்த வலி அதிகமாக இருக்கும்.
இரண்டாவது வகையான வலி என்னவென்றால் திருமனம் ஆனப்பின்பும் இந்த வலி தொடரும், முதல் குழந்தை பிறந்த பின்புதான் இந்த வலி மறையும்! கர்பப்பையில் வலி இருக்கும் இதன் தொடர்ச்சியாக நடுக்கம், வாந்தி, மற்றும் குமட்டல் இருக்கும்! இதற்க்கு பெரிய காரணங்கள் இல்லை என்றாலும், சிறிய அளவு கர்பப்பை, கர்பப்பையில் போதிய ரத்தம் இல்லாமை, பிறப்புறுப்புகளில் பலவகையான பிரச்சினைகள் ஆகும்.
ஹார்மோன் பிரச்சினைதான் இதன் முதன்மை காரணம்! நம் உணவில் பொட்டாசியமும் சோடியமும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று, இவை தான் நம் நரம்பு மண்டலத்தை தூண்டி தங்கு தடையின்றி வேலை செய்ய வைக்கின்றது. திருமணம் ஆனபிறகு இந்த பிரச்சினை வெகுவாக குறைந்துவிடுகிறது. அக்குபங்க்சர் மூலம் சூதகவலி எனப்படும் டிஸ்மெனோரியாவை எளிதில் மருந்துகளின்றி குனமாக்கிவிடலாம்.
கீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் "சூதகவலி எனும் வலியுடன் கொண்ட மாதவிலக்கு" பிரச்சினையில் இருந்து முழுமையாக குணம் பெறலாம்
அக்குபங்க்சர் புள்ளிகள் :
Ren 6, Ren 4, Ren 3, Sp 6, LI 4
-த.நா.பரிமளச்செல்வி,
அக்குபஞ்சர் மருத்துவர்