சீன பொருட்கள் மீதான எண்ணத்தை மாற்றிய சியோமி
சியோமி ஸ்மார்ட்போன்கள் சீன பொருட்கள் பற்றிய எண்ணத்தை உலகளவில் மாற்றி புரட்சி செய்துள்ளது.
சீன பொருட்கள் என்றாலே போலி, தரம் குறைந்தது என்ற பார்வைதான் உலகளவில் இருந்து வருகிறது. இதை ஒரே நிறுவனம் ஒரே பொருளான ஸ்மார்ட்போன் மூலம் மாற்றி புரட்சி செய்துள்ளது. சீன நிறுவனமான சியோமி ஸ்மார்ட்போன் உலகளவில் ஒரு தரத்தை பிடித்துள்ளது. எதிர்காலத்தில் சாம்சங் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்களை பின்னுக்கு தள்ளினால் கூட ஆச்சரியம் இல்லை.
சியோமி ஸ்மார்ட்போன் சந்தையில் வந்த பின் சாம்பங் மற்றும் ஆப்பிள் போன்களுக்காக மவுசு சற்று குறைந்துள்ளது. வரிசையாக பட்ஜெட் மற்றும் தரமான மொபைல் போன்களை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சியோமி நிறுவனம் தற்போது உலகில் நான்காவது பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமாக உள்ளது. இன்னும் இந்த நிறுவனம் அமெரிக்கா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் ஆகிய நாடுகளில் தனது விற்பனையைத் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2010 ஆம் ஆண்டு லேய் ஜுன் சியோமி நிறுவனத்தை தொடங்கினார். ஸ்மார்ட்போன் மட்டுமல்லாமல் எலட்ரானிக் பொருட்களையும் உற்பத்தி செய்து விற்க தொடங்கினார். உலக சந்தையில் தற்போது சியோமி ஸ்மார்ட்போன் சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது.
தொழில்நுட்ப புரட்சியை சரியாக பயன்படுத்திக் கொண்ட லேய் ஜுன், சீன பொருட்களுக்கு உலக சந்தையில் ஒரு அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளார்.