என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?
கடலூர் மாவட்டத்தின் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி நிறுவனத்தில் 1962ஆம் ஆண்டில் கட்டப்பட்ட முதல் அனல் மின் நிலையத்தின் 25 ஆண்டுகள் காலவரை முடிவடைந்ததால், அதனை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இச்சமயம் வரை அவ்வப்போது திருத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டாலும், ஒரு அனல் மின் நிலையம் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கக்கூடாது என்ற அடிப்படையில், இந்த மின் நிலையத்தை மூட மத்திய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவு அடிப்படையில், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் முதலாவது அனல் மின் நிலையம் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மூடப்பட்டது.
இதை மூடுவதால் ஏற்படும் மின் உற்பத்தி குறைபாட்டை சரி செய்யும் நோக்கத்தில் புதிய அனல் மின் நிலையம் செயல்பாட்டைத் தொடங்கியது. இந்நிலையில், பாதுகாப்பான முறையில் முதலாவது அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணிகள் தற்போது நடைபெறுகின்றன.
Edited by Mahendran