புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (19:38 IST)

ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய அராம்கோ! – உலகின் மிகப்பெரிய நிறுவனம்!

சவுதி அரேபியாவின் அரசு நிறுவனமான அராம்கோ 2 லட்சம் ட்ரில்லியன் டாலர் மதிப்புக்கு உயர்ந்து உலகின் முதல் பெரும் நிறுவனமாக மாறியுள்ளது.

உலகின் டாப் பணக்கார நிறுவனங்களின் பட்டியலில் அராம்கோ நிறுவனமும் இணைந்துள்ளது. சவுதி அரசால் நிர்வகிக்கப்படும் இந்த நிறுவனம் பெட்ரோலியம் மற்றும் எரிப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. சவுதி அரேபிய பங்கு சந்தையில் நேற்று வரை 8 சதவீதம் உயர்வு கண்டிருந்த அராம்கோ பங்கு மதிப்பு இன்று 10 சதவீதமாக உயர்ந்தது. இந்நிறுவனத்தின் 1.5% பங்கு மட்டுமே பங்கு சந்தையில் ஏலம் விடப்பட்டது. அதுவும் சவுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அராம்கோ நிறுவனத்தின் பங்கு வர்த்தக மதிப்பு 2 லட்சம் ட்ரில்லியன் டாலராக உயர்ந்தது. இதன் மூலம் உலகின் மிக அதிக வருமானம் ஈட்டும் நிறுவனமாக அராம்கோ உருவெடுத்துள்ளது.

இதற்கு முன்னர் வரை 1.19 லட்ச ட்ரில்லியன் டாலர் மதிப்பில் முதலிடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது அராம்கோ. அராம்கோவின் இந்த சந்தை மதிப்பு மூன்றாம் உலக நாடுகளின் ஜிடிபி மதிப்புக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமேசான், ஃபேஸ்புக், வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் சந்தை மதிப்பை இணைத்தாலும் அது அராம்கோவின் மதிப்பு ஈடாகாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நிறுவனம் ஒரு நாட்டின் ஜிடிபி மதிப்பை விட அதிகமாக சந்தை மதிப்பு கொண்டிருப்பது உலக வர்த்தக சந்தையையே வாய்பிளக்க வைத்துள்ளது.