ரூ.80 கோடி டாலருக்காக காத்திருக்கும் ரிலையன்ஸ்!!
அனில் அம்பானியின் ஆர்காம் தொலைத்தொடர்பு நிறுவனம் கடன் நெருக்கடியால் 2ஜி சேவையையும், வாய்ஸ் கால் சேவையையும் நிறுத்திக்கொள்வதாக அறிவித்திருந்தது.
அம்பானி குடும்பத்தை சேர்ந்த சகோதர்களில், ஒருபக்கம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இந்தியா முழுவதும் கொடிகட்டி பறந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அனில் அம்பானியின் ஆர்காம் செயல் இழந்துள்ளது.
ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தனது சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதனால், அதன் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க் இணைப்புகளுக்கு மாற துவங்கிவிட்டனர்.
கடன் நெருக்கடியை குறைக்க கடந்த செப்டம்பர் மாதம் அனில் அம்பானியில் ஆர்காம் நிறுவனத்துடன் ஏர்செல் நிறுவனம் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த இணைப்பின் மூலம் இரு நிறுவனங்களின் ரூ.60,000 கோடி கடன் தொல்லை நீங்கும் என கூறப்பட்டது.
ஆனால், இந்த இணைப்பு திட்டம் சில காரணங்களால் பின்வாங்கப்பட்டது. எனவே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 10 ஆண்டு கால கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் 80 கோடி டாலர் திரட்டுகிறது.
ரிலையன்ஸ் 3.66% வட்டியில் நிதி திரட்டுகிறது. இந்திய கார்ப்பரேட் நிறுவனம் மிக குறைந்த வட்டியில் திரட்டும் நிதி இதுவாகும். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தற்போது ரூ.2.14 லட்சம் கோடி அளவுக்கு கடன் இருக்கிறது என்பது குறிப்பிடத்தகக்து.