புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 ஜூலை 2020 (12:54 IST)

எதுக்கு இந்த பொழப்பு? Zoom-ஐ ஈ அடிச்சான் காப்பி அடித்த Jio!!

நேற்று அறிமுகமான Jio Meet செயலில் Zoom Meet செயலின் காப்பி பேஸ்ட் என இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர். 
 
கொரோனா காரணமாக பலர் வீட்டில் இருந்தே வேலை செய்வதாலும்,  பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வழியாக பாடங்களை பயிற்றுவிக்கின்றன என்பதாலும் செயலிகளின் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றனர். 
 
எனவே Zoom, Google Hangout போன்ற தளங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் வீடியோ கான்பரன்சிங் சேவைக்கான ஜியோ செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜியோ மீட் என்ற பெயரிலான இந்த செயலி பயனர்களின் சேவைக்காக அறிமுகமாகியுள்ளது. 
ஒரே நேரத்தில் ஜியோ மீட்டில் 100 பேர் வரை இந்த செயலி மூலம் உரையாட முடியும். ஆனால், இந்த ஜியோ மீட், Zoom மீட்டின் காப்பி போல உள்ளதாக இணையவாசிகள் கிண்டல் அடித்து வருகின்றனர்.