இருந்து இருந்து எகிறும் விலை... கொடுத்த இலவசத்தை வட்டியோடு வசூலிக்கும் அம்பானி!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த கட்டண் ரீசார்ஜ்ஜை ரத்து செய்துவிட்டு ஜியோபோனுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஜியோ தனது 6 பைசா கட்டணத்தை திரும்பி பெறாமல் செயல்பாட்டில் வைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து அதன் துவக்க சலுகையை ரூ.49-ல் இருந்து ரூ.75 ஆக உயர்த்தியுள்ளது. மேலும் புதிய சலுகைகளையும் அறிமுகம் செய்துள்ளது. அவர் பின்வருமாறு...
ரூ. 75 ரீசார்ஜ்:
இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 3 ஜிபி டேட்டா, மொத்தமாக 50 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. தினமும் 100 எம்பி அதிவேக டேட்டா கிடைக்கும். மற்ற நெட்வொர்க் எண்களுக்கு அழைப்பு விடுக்க 500 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.
ரூ. 125 ரீசார்ஜ்:
இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 500 எம்பி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 500 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.
ரூ. 155 ரீசார்ஜ்:
இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 500 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள்.
ரூ. 185 ரீசார்ஜ்:
இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 500 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.