ரிலையன்ஸ், ஏர்சல் கூட்டணியா?
ஜூலை மாதம் தொடக்கத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் உடன் ஏர்சல் நிறுவனம் இணைந்து செயல்பட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிலையன்ஸ், ஏர்சல் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே தொடர்பு துறையில் தங்களுக்கென்ற வாடிக்கையாளர்களை தக்கவைத்து உள்ளனர். ஆனால் சிறப்பான சேவை அளிப்பதில்லை.
தற்போது இந்த இரண்டு நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து உருவாக்கும் புதிய நிறுவனத்தின் வருவாய் அடுத்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ரூ:25,000 கோடியாக இருக்கும் என்றும், லாபம் ரூ: 6,000 கோடியாக இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது.
அந்த புதிய நிறுவனத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் 50 சதவீதமும், ஏர்சல் நிறுவனம் 50 சதவீதமும் பங்கை மூலதனமாக கொண்டிருக்கும். புதிய பிராண்டு பெயரில் செயல்பட உள்ள இந்நிறுவனம் சில ஆண்டுகளுக்கு பிறகு பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் என தெரிகிறது.