வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (15:08 IST)

வங்கி லாக்கர்கள் பாதுகாப்பானதா?? இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்!!

வங்கி லாக்கர் மிகவும் பாதுகாப்பானது என்கிற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் அது 100% உண்மையல்ல. 


 
 
லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பண்மோ அல்லது நகையோ திருடு போனால் அல்லது பாதிப்படைந்தால் என்ன செய்வது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
 
வங்கிகளின் சேவை குறைபாடுகள் காரணமாக இழப்பு ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம். சரியான ஆதாரங்கள் இருக்கும் பட்டத்தில் இழப்பீடு கோரலாம். 
 
வங்கி லாக்கர் காப்பீடு:
 
# லாக்கர் திருட்டு மற்றும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க காப்பீடு எடுப்பது சிறந்தது. 
 
# ஒரு காப்பீட்டு நிறுவனம் லாக்கருக்கு பாலிசி எடுக்கும் முன்பு லாக்கரில் உள்ள பொருட்களின் மதிப்பு என்ன என்பதை கணக்கிட்டு அதற்கான பிரீமியத் தொகை நிர்ணயம் செய்யும். 
 
# இழப்பு ஏற்படும் பட்சத்தில் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து இழப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம். பிரீமியத் தொகை ஒரு சதவீதம் முதல் 2 சதவீதம் வரை இருக்கும்.
 
# ஹெச்டிஎப்சி எர்கோ, டாடா ஏஐஜி, ஓரியண்டல் இன்ஷூரன்ஸ், நியூ இந்தியா இன்ஷூரன்ஸ் ஆகிய காப்பீட்டு நிறுவனங்கள் லாக்கரில் வைக்கப்படும் தங்கத்துக்கு காப்பீடு வழங்குகின்றன.