பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: நன்மை, தீமை!!
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, பாராளுமன்றத்தில் மாநிலங்களின் நிதி அமைச்சரான அர்ஜூன் ராம் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 10 ரூபாய் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் வெளியிட்டனர்.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு வரலாறு:
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் முதன் முதலில் 1968ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அச்சடிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் பிளாஸ்டிக் நாணயங்களைப் பயன்படுத்துகிறது. இதைத் தவிர உலகின் 30 நாடுகள் பிளாஸ்டிக் நாணயங்களைப் பயன்படுத்துகின்றன.
நன்மைகள்:
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் சராசரி ஆயுட்காலம் 5 வருடம் என்றும் கள்ள நோட்டு அடிக்க இயலாது என்றும் கூறுகின்றனர்.
பேப்பரில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளை விட பிளாஸ்டிக்கில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் சுத்தமாகவும் இருக்கும்.
பாதுகாப்பு அம்சங்களை எளிதாகச் சரி பார்க்கலாம். நீரில் இருந்தாலும் ஏதுவும் ஆகாது.
தீமைகள்:
உற்பத்தி செலவு அதிகம். மேலும், ஏடிஎம் இயந்திரங்களை மீண்டும் மாற்றி அமைக்க வேண்டி வரும்.