விலை குறைந்தது ஒப்போ K1: எவ்வளவு தெரியுமா?

Sugapriya Prakash| Last Modified சனி, 11 ஜனவரி 2020 (11:48 IST)
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ தனது படைப்பான K1 ஸ்மார்ட்போன் மீதனான விலையை குறைத்துள்ளது.  
 
ஒப்போ நிறுவனத்தின் கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் மீதான விலை குறைப்பட்டுள்ளது.  ஆம், ரூ.16,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்போன் ரூ. 13,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
இந்த ஸ்மார்ட்போனின் புதிய விலை மாற்றம் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆஸ்ட்ரல் புளு மற்றும் பியானோ பிளாக் என இரண்டு நிறங்களில் விற்பனையாகிறது.
 
ஒப்போ கே1 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஆன்-செல் AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓ.எஸ். 5.2, அட்ரினோ 512 GPU
# 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி, 
# டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 16 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
# 25 எம்பி செல்ஃபி கேமரா
# 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரி


இதில் மேலும் படிக்கவும் :