1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. on average lose Rs 2.45 crore every hour in every circle there is an Internet shutdown

இண்டர்நெட் முடக்கம்... 1 மணி நேரத்திற்கு ரூ. 3.67 கோடி நஷ்டம்!

இண்டர்நெட் முடக்கம்
இணைய சேவை முடக்கப்படுவதால் ஒவ்வொரு மணி நேரமும் ரூ.3.67 கோடி வீதம் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் போராட்டம் மற்றும் வேறி சில காரணங்களால் இணைய சேவை முடக்கப்படும் போது ஒவ்வொரு மணி நேரமும் ரூ. 2.45 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 
 
இந்த கூட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை இழப்பை சந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் 134 முறை இணைய சேவை முடக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 104 முறை இணைய சேவை முடக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.