வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (20:18 IST)

ரூ.14 லட்சம் தள்ளுபடி; மலைக்க வைக்கும் கார் ஆஃபர்!

கடந்த மாதம் கார் விற்பனை 5.57% சரிவடைந்துள்ளது. இதற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே, விற்பனையை உயர்த்தும் வகையில் கார் நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளன. 
 
மாருதி சுசூகி, ஹூண்டாய், மகிந்திரா, போர்ட், டாடா மோட்டார்ஸ்,  பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் கார் நிறுவனங்களும் தள்ளுபடிகளை வழங்கியுள்ளன. 
 
ஆஃபர் கார்கள்: 
 
மாருதி பலேனோ ரூ.25,000, டொயோட்டா யாரிஸ், ஹூண்டாய் எலைட் ஐ20, மாருதி ஆல்டோ கே10 ஆகியவை தலா ரூ.50,000, டாடா நெக்சான் ரூ.57,000, ஹோண்டா சிட்டி ரூ.62,000, மகிந்திரா ஸ்கார்பியோ ரூ.70,000, ஹூண்டாய் கிராண்ட் ஐ10, மாருதி வேகன் ஆர் தலா ரூ.75,000, ரெடால்ட் டஸ்டர் ரூ.1 லட்சம், மெர்சிடிஸ் சிஎல்ஏ ரூ.5.5 லட்சம், மெர்சிடிஸ் ஜிஎல்சி பெட்ரோல் ரூ.6 லட்சம், ஆடி ஏ6 ரூ.12.5 லட்சம், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ரூ.14 லட்சம் என தள்ளுபடி வாரி வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த சலுகைகள் ரூ.50,000 முதல் துவங்கி ரூ.14 லடசம் வரை வழங்கப்படுவதோடு காப்பீடு செலவுகள், நீட்டிக்கப்பட்ட வாரண்டி, குறைந்த வட்டியில் கடன் ஆகியவையும் வழங்கப்படுகிறது.