1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 25 மார்ச் 2017 (14:55 IST)

ஒரே நேரத்தில் 120 நாடுகளில் களமிறங்கும் நோக்கியா

உலகளவில் ஒரே நேரத்தில் 120 நாடுகளில் நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாக ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது.


 

 
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை நோக்கியா நிறுவனம் மீண்டும் அறிமுக செய்துள்ளது. 120 நாடுகளில் ஒரே நேரத்தில் நோக்கியா போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
 
நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3, மொபைல் போன்கள் மே அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் விலை மாறுபடும். இந்திய ரூபாயிக்கு புதிய நோக்கியா 3 ரூ.9,800-க்கும், நோக்கியா 5 ரூ.13,500-க்கும், நோக்கியா 6 ரூ.16,000-க்கும், நோக்கியா 3310 ரூ.3,500-க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வெகு நாட்கள் கழித்து நோக்கியா நிறுவனம் மீண்டும் சந்தையில் களமிறங்கியுள்ளது. புதிதாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதனால் நோக்கியா நிறுவனம் மீண்டும் ஒரு புரட்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.