1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (14:03 IST)

டபுள் டமாகா!! நோக்கியாவின் 2 படைப்புகள் அறிமுகம்!!

நோக்கியா தனது புதிய படைப்பான நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி பீச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. 
 
நோக்கியா 215 மற்றும் 225 4ஜி சிறப்பம்சங்கள்: 
# 2.4 இன்ச் 320x240 பிக்சல் QVGA LCD ஸ்கிரீன்
# பீச்சர் ஒஎஸ், 1 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் பிராசஸர்
# 64 எம்பி ரேம், 128 எம்பி மெமரி
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# வயர்லெஸ் எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர்
# விஜிஏ கேமரா ( நோக்கியா 225 4ஜி)
# ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி
# 1200 எம்ஏஹெச் பேட்டரி
 
விலை விவரம்: 
நோக்கியா 225 4ஜி மாடல் கிளாசிக் புளூ, பிளாக் மற்றும் மெட்டாலிக் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 
நோக்கியா 215 4ஜி மாடல் டர்குயிஸ் மற்றும் பிளாக் நிறங்களில் ரூ. 3,151 கிடைக்கிறது.