மர்மத்தை உடைக்க மறுக்கும் நோக்கியா: 5ஜி போனில் என்ன இருக்கு?
நோக்கியா தனது புதிய படைப்பை வரும் 19 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா ரத்து செய்யப்பட்டதால், ஹெச்.எம்.டி. குளோபல் புதிய விழாவினை தனியே ஏற்பாடு செய்து இருக்கிறது. இந்த விழாவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ப, நோக்கியா தனது முதல் 5ஜி மொபைல்போனை அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போனின் பெயர், வடிவமைப்பு, அம்சங்களின் விவரங்கள் சீக்ரெட்டாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த டீசர் நாளை (மார்ச் 8) வெளியாகும் என தெரிகிறது.