காலக்கெடு நீடிப்பு: அபராதம் பற்றிய கவலை இல்லை!
வருமானவரி சட்டத்தின்படி வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வரும் ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாளாகும். ஆனால், இதனை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது.
இதற்கு முன்னர் வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் அபராதம் செலுத்த வேண்டி வரும் என எச்சரித்தது.
# அதாவது, 2018 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வருமான வரித்தாக்கலினை செய்தால் ரூ.5,000 வரை அபராதமும்,
# 2018 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகு என்றால் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
# தனிநபர் ஒருவரின் வருவாய் ரூ.5 லட்சம் குறைவு என்றால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
ஆனால், இப்போது இந்த அபராதங்கள் இன்றி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஒரு மாத கால அவகாசத்தை நீடித்து உள்ளது.