வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (08:57 IST)

ஆன்லைனில் கார் விற்பனை: ஹோண்டா நிறுவனத்தின் புதிய முயற்சி!

ஆன்லைனில் கார் விற்பனை
வீட்டு உபயோக பொருட்கள் முதல் தங்கம் வரை ஆன்லைனில் வாங்கும் வசதி வந்துவிட்ட நிலையில் முதல்முறையாக இந்தியாவில் ஆன்லைனில் கார் விற்கும் புதிய முயற்சியை ஹோண்டா நிறுவனம் செய்து வருகிறது.
 
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் நேற்று இதுகுறித்த திட்டத்தை அறிமுகம் செய்தது. இதுகுறித்து ஹோண்டா நிறுவனத்தின் மூத்த விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் இயக்குனர் ராஜேஷ் கோயல் என்பவர் கூறியபோது, ‘ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் கார் விநியோக மையங்களுக்கு செல்லாமல் ஆன்லைன் மூலமாகவே கார் வாங்குவதற்கு வசதியாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு புது அனுபவத்தை வழங்கும் என்றும் கூறினார்.
 
மேலும் இந்த வசதியானதும், செயல்திறன் மிகுந்தது என்றும், ‘வீட்டிலிருந்தே ஹோண்டா’ என்ற நிறுவனத்தின் இந்த புதிய முன்முயற்சியின் மூலம் வாடிக்கையாளா்கள் தங்களுக்கு தேவையான தயாரிப்பு, விநியோக மையம், காரின் கலர், டிசைன் ஆகியவற்றை தாங்களே தோ்வு செய்து காரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறினார்.
 
.ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட விநியோக விற்பனை அமைப்புகள் மூலமாக ஆன்லைன் கார் விற்பனையை தொடங்கியுள்ள நிலையில் இதனை பின்பற்றி மற்ற நிறுவனங்களும் இதேபோல் ஆன்லைனில் கார் விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது